உயிருக்கு போராடிய மனைவி... காப்பாற்றச் சென்ற கணவன் உயிரிழப்பு: தாமிரபரணியில் நடந்த சோகம்

உயிருக்கு போராடிய மனைவி... காப்பாற்றச் சென்ற கணவன் உயிரிழப்பு: தாமிரபரணியில் நடந்த சோகம்

தாமிரபரணி ஆற்றில் உயிருக்குப் போராடிய தன் மனைவியைக் காப்பாற்றச் சென்ற கணவர் பரிதாபமாக உயிர் இழந்தார். மனைவியைத் தேடும் பணி நடந்துவருகிறது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்தவர் லுக்மான் ஹக்கீம்(44). இவரது மனைவி சகர்பானு(33). ஹக்கீம் நெல்லை மேலப்பாளையத்தில் தங்கி இருந்து பழைய பேப்பர் வாங்கிவிற்கும் தொழில் செய்துவந்தார். இதனால் அவர் தன் குடும்பத்தோடு நெல்லையில் தங்கியிருந்தார்.

லுக்மான் ஹக்கீமும், அவரது மனைவி சகர்பானுவும் இன்று தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றனர். இவர்களோடு மதுரையில் இருந்து வீட்டிற்கு வந்த உறவினர்கள் சிலரும் குளிக்கச் சென்றனர். டவுண் கருப்பத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது சகர்பானு ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டார். அவரை மீட்க அவரது கணவர் லுக்மான் ஹக்கீமும் ஆழமானப் பகுதிக்குச் சென்றார். அப்போது லுக்மான் மாயமானார். அவரது மனைவியும் சிறிதுநேரத்தில் நீரில் மூழ்கினார்.

இதுகுறித்து தீயணைப்புப் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் வந்து தேடினர். இதில் லுக்மான் ஹக்கீம் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவி சகர்பானுவை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in