மனைவி செய்த காரியம்: ஆத்திரத்தில் அந்தரங்க உறுப்பைத் துண்டித்த கணவர்

மனைவி செய்த காரியம்: ஆத்திரத்தில் அந்தரங்க உறுப்பைத் துண்டித்த கணவர்

தன் பெற்றோர் வீட்டில் இருந்து கொண்டு மனைவி வரமறுத்ததால், ஆத்திரத்தில் தனது அந்தரங்க உறுப்பை அவரது கணவர் துண்டித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் பிஹாரில் நடைபெற்றுள்ளது.

பிஹாரில் உள்ள மாதேபுரா காவல் நிலையத்திற்குட்பட்ட ரஜ்னிநய நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா பாசுகி(25). இவருக்கும் அனிதாவிற்கும் திருமணமாகி மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். பஞ்சாப்பின் மண்டியில் வேலை செய்து வந்த கிருஷ்ணா, கடந்த 2 மாதங்களுக்கு முன் ரஜ்னிநயநகரில் உள்ள தனது குடும்பத்தினரைப் பார்க்க வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மனைவி அனிதா பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனது மனைவி அனிதாவை, வீட்டிற்கு வருமாறு கிருஷ்ணா அழைத்துள்ளார். ஆனால், கணவருடன் வர முடியாது என அனிதா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா நேற்று இரவு தனது அந்தரங்க உறுப்பைக் கத்திப்போன்ற கூர்மையான ஆயுதத்தால் துண்டித்தார்.

இதனால் ரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அவரை மீட்ட உறவினர்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கிருஷ்ணாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மருத்துவமனையில் தற்போது கிருஷ்ணா அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக மருத்துவக்கல்லுரி மருத்துவமனையின் மருத்துவர் சுகேஷ் குமார் கூறியுள்ளார். மனைவி தன்னுடன் சேர்ந்து வாழ வரமறுத்ததால், தனது அந்தரங்க உறுப்பை வாலிபர் துண்டித்த சம்பவம் பிஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in