`அனுமதியின்றி இயங்கியுள்ளது கனியாமூர் பள்ளி விடுதி'- மாநில குழந்தைகள் நல ஆணையர் அதிர்ச்சி தகவல்

கனியாமூர் பள்ளி
கனியாமூர் பள்ளி

கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் உயிரிழந்த மாணவி தங்கியிருந்த விடுதி முறையான அனுமதி பெறாமல் இயங்கியது என மாநில குழந்தைகள் நல ஆணையர் தெரிவித்துள்ளார்.

சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி உயிரிழந்த விவகாரம் போராட்டமாகவும், பெரும் கலவரமாகவும் வெடித்தது. அதனையொட்டி மாநில குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர் இன்று கனியாமூர் சென்று அந்தப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி, ``பள்ளியின் விடுதி முறையான அனுமதி பெறாமல் இயங்கி வந்திருக்கிறது. அதில் 24 மாணவிகள் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். இது விடுதிகள் சட்டத்தின்படி தண்டனைக்குரியது. இது குறித்து ஆட்சியரிடம் தகவல் தெரிவித்துள்ளோம்.

மாணவி உயிரிழந்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட கல்வி அதிகாரி, முதன்மை கல்வி அலுவலர், கோட்டாட்சியர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தி இருக்கிறோம். பள்ளியிலும் முழுமையாக விசாரணை செய்து ஆய்வு நடத்தியுள்ளோம்.

இந்த விவகாரத்தில் மட்டுமல்ல எந்த விவகாரத்திலும் பாதிக்கப்படும் குழந்தைகளின் பெயர்கள், படங்களை வெளியிட வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in