கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுத்த ஹிஜாப் விவகாரம்!- இன்று முக்கிய தீர்ப்பு

ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள்
ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள்Hindu கோப்பு படம்

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பளிக்க உள்ளது.

கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டம், சிக்கமகளூருவில் உள்ள அரசு கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை அனுமதிக்க பேராசிரியர்கள் மறுத்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் தனி வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டதால் மீண்டும் சர்ச்சை வெடித்தது.

இதனிடையே, அதே கல்லூரிக்குள் மாணவர்கள் காவி துண்டு அணிந்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினர். அவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்க கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது. அதே நேரத்தில் இந்த பிரச்சினை 10 மாவட்டங்களில் வெடித்தது. காவி துண்டு அணிந்து வந்த மாணவர்களை அனுமதிக்க கல்லூரி நிர்வாகம் மறுத்ததால், நுழைவுவாயில் முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க கல்லூரிகள் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே, இஸ்லாமிய மாணவிகள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in