சொத்தை விற்றதால் விடாமல் சண்டை செய்த வாரிசுகள்: உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை

சொத்தை விற்றதால் விடாமல் சண்டை செய்த வாரிசுகள்: உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை
OWNER

தன் சொத்துக்களை விற்றதால் வாரிசுகள் தொடர்ந்து சண்டை செய்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல் முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், புளியங்குடி பாறைப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் காளியப்பன்(70) கூலித் தொழிலாளியான இவருக்கு இரு மகன்கள், இருமகள்கள் என மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளனர். காளியப்பன் தனக்குச் சொந்தமான இடத்தை அதே ஊரைச் சேர்ந்த ஊர்க்காவல்படை வீரர் ஒருவருக்கு அண்மையில் விற்றுள்ளார். ஆனால் காளியப்பன் சொத்துக்களை தங்களுக்குத் தராமல் விற்றுவிட்டதாக அவரது வாரிசுகள் அவரிடமும், அவரிடம் இருந்து சொத்துக்களை வாங்கிய நபரிடமும் தொடர்ந்து சண்டை செய்து உள்ளனர்.

இதனால் மனம் உடைந்த காளியப்பன் கடந்த 19-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் அருந்தினார். இதனைத் தொடர்ந்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி காளியப்பன் இன்று பரிதாபமாக உயிர் இழந்தார். சொத்துக்களை விற்றதால் வாரிசுகளின் கோபத்தால் தந்தை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in