தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மின்சாதன பயன்பாடுகளில் பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டுமென மின்வாரிய அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று இரவு முதலே பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது புயலாக மாறும் பட்சத்தில் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழைக்காலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதை காட்டிலும் மின்சாரம் பாய்ந்து இறக்கும் நிகழ்வுகளே அதிகம் நிகழும். காரணம் பலத்த மழை பெய்தால் மின் வயர்கள் அறுந்து விழும் நிகழ்வு ஏற்படும்.
இதையறியாமல் யாரேனும் காலை வைத்து மிதித்துவிட்டால் மின்சாரம் பாய்ந்து இறக்க நேரிடும். எனவே மழைக்காலங்களில் இது போன்ற விபத்துகள் ஏற்படுவதை தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மின்வாரிய தனது எக்ஸ் தளத்தில், ‘’கீழே விழுந்த மின்கம்பிகள் அல்லது கம்பங்கள் அருகில் செல்லாமல் விலகி இருக்கவும். அப்படி காணும் பட்சத்தில் எச்சரிக்கை அடையாளம் செய்து மின்னகம் எண் 94987 94987 என்ற எண்ணுக்கு அழைக்கவும். மின் கம்பம்/மின்மாற்றி/ பகிர்மான பெட்டி அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
தரமற்ற பிவிசி வயரை கொண்டு வீட்டிலிருந்து அருகில் உள்ள கொட்டகைக்கோ அல்லது கழிவறைக்கோ கொண்டு செல்ல வேண்டாம். மாடிகளில் துணி உலர வைக்கும் போது மின் கம்பி மேலேயும் அருகிலும் இல்லை என்பதை உள்ளதா என்பதை உறுதி செய்யவும்’’ என அறிவுறுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!
காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!
உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!
அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!