திருமணம் முடிந்த இரண்டே நாளில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தற்கொலை: விடுமுறை எடுத்து வந்த நிலையில் விபரீதம்

திருமணம் முடிந்த இரண்டே நாளில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தற்கொலை: விடுமுறை எடுத்து வந்த நிலையில் விபரீதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணம் முடிந்த இரண்டே நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பூட்டேற்றி அருகில் உள்ள வடக்கு காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் டேவி. இவரது மகன் சுபின்(32) எல்லைப் பாதுகாப்புப் படையில் பத்து ஆண்டுகள் வேலை செய்த இவருக்கும், விழுதயம்பலம் பகுதியைச் சேர்ந்த தனிஷா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக எல்லைப் பாதுகாப்புப் படை பணியில் இருந்து விடுப்பு எடுத்துவிட்டு ஊருக்கு வந்திருந்தார் சுபின். இந்நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து குணமடைந்தார்.

தனிஷா, சுபினுக்கு தூரத்து உறவினரும்கூட. இருவீட்டாரும் சேர்ந்து இவர்களது திருமணத்தை கடந்த 14-ம் தேதி நடத்திவைத்தனர். இருநாள்கள் மட்டுமே இந்த தம்பதிகள் வாழ்ந்த நிலையில் இன்று காலையில் தன் அறையில் இருந்து வெளியே வந்த சுபின் வீட்டின் பின்பகுதிக்குப் போய் அங்கிருந்த தாழ்வாரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கருங்கல் போலீஸார் சுபினின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திருமணம் முடிந்த இரண்டே நாளில் புதுமாப்பிள்ளை சுபின் ஏன் தற்கொலை செய்தார் என்பது குறித்து கருங்கல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in