கொடுத்த பணத்தை கேட்டு அம்மாவிடம் அடிக்கடி சண்டை: பாட்டியை கொடூரமாக கொன்ற பேரன்

கொடுத்த பணத்தை கேட்டு அம்மாவிடம் அடிக்கடி சண்டை: பாட்டியை கொடூரமாக கொன்ற பேரன்

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பாட்டியை கழுத்தை அறுத்து, சுத்தியால் அடித்து கொலை செய்த பேரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரை சேர்ந்தவர் விசாலாட்சி(70). வீட்டு வேலை செய்து வரும் இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மகள் உள்ளார். மகள் அமுதாவிற்கு திருமணமாகி கணவர் ரவி, மகன் சதீஷ் ஆகியோருடன் செங்குன்றம் காந்தி நகரில் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மகள் அமுதா தனது தாயிடம் வீடுகட்ட பணம் கேட்டதன் பேரில் விசாலாட்சி தனது நகையை அடமானம் வைத்து 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்து உதவியுள்ளார். பின்னர் அமுதா சிறுக சிறுக 1 லட்ச ரூபாயை தாயிடம் திருப்பி கொடுத்த நிலையில் 4 ஆண்டுகள் ஆகியும் பாக்கி பணத்தை திரும்பி தராமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய் விசாலாட்சி அடிக்கடி மகள் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டு தொல்லை கொடுத்ததுடன் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in