கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து; அலறிய பயணிகள்: 36 பேர் உயிர் தப்பிய அதிசயம்!

அரசு பேருந்து
அரசு பேருந்துகட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து; அலறிய பயணிகள்: 36 பேர் உயிர் தப்பிய அதிசயம்!
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் 36 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கும்பகோணத்திலிருந்து 36 பயணிகளுடன் அரசு சொகுசு பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடமலை புத்தூர் என்ற இடத்தில்  பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

இதில் இருவருக்கு மட்டும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அச்சரப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் விபத்துக்கு குறித்து அச்சரப்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in