அக்காவின் தவறான பழக்கத்தைக் கண்டித்த தங்கை… ஆண் நண்பர்களை ஏவி விட்ட இளம்பெண்: வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி!

அக்காவின்  தவறான பழக்கத்தைக்  கண்டித்த தங்கை…  ஆண் நண்பர்களை ஏவி விட்ட இளம்பெண்: வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி!

ஆண் நண்பர்களுடன் தொடர்பு வைத்திருப்பதைக் கண்டித்த தங்கையை தனது ஆண் நண்பர்களை வைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அக்கா கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 12 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை பிரேதபரிசோதனை செய்த போது கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்ட சிறுமியின் 19 வயது சகோதரி நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் தான் இந்த கொலைக்குக் காரணமாக இருந்தார் என்பதை அறிந்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து லக்கிம்பூர் கேரி மாவட்ட எஸ்.பி சஞ்சீவ் கூறுகையில், “ 19 வயது இளம்பெண் ஒரே நேரத்தில் 4 ஆண் நண்பர்களுடன் பழகியுள்ளார். இதை அவரது 12 வயது தங்கை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது சகோதரி, தனது தங்கையை கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு ஏற்கனவே இருந்த அவரின் ஆண் நண்பர்கள் ரஞ்சித் சவுகான், அமர்சிங், அங்கித், சந்தீப் ஆகியோர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். அதற்கு அந்த சிறுமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பின்னர் அவரது சகோதரியின் உதவியுடன் அச்சிறுமியை அக்கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அத்துடன் சிறுமியை துப்பாட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். இச்சம்பவம் நடந்த போது தீபு, அர்ஜூன் என்ற இருவர் கரும்பு தோட்டத்திற்கு வெளியே பாதுகாப்புக்கு நின்றுள்ளனர். இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் ” என்று தெரிவித்தார்.
தனது சொந்த சகோதரியால் தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in