மது கொடுத்தனர்... பீடி புகைக்க வைத்து வீடியோ எடுத்தனர்: சிறுமிக்கு வாலிபர்களால் நடந்த துயரம்

மது கொடுத்தனர்... பீடி புகைக்க வைத்து வீடியோ எடுத்தனர்: சிறுமிக்கு வாலிபர்களால் நடந்த துயரம்

10 வயது சிறுமிக்கு மது கொடுத்து, பீடி புகைக்க வைத்ததோடு, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர்கள் 6 பேர் சிக்கியுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் தேன்கனிக்கோட்டையில் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றம்). 10 வயதான உமாவுக்கு இதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது அருந்த கொடுத்ததோடு, பீடியை புகைக்க வைத்துள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால், இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சங்கையா (22), குமார் (21), ரமேஷ் (22), சிவராஜ் (27), ருத்ரப்பா (26), அழகப்பன் (26) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சிவருத்தரப்பா, மல்லேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in