வீட்டிற்குள் புகுந்து தாக்கிய 2 காதலர்கள்: கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலை முயற்சி

வீட்டிற்குள் புகுந்து தாக்கிய 2 காதலர்கள்: கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலை முயற்சி

வீட்டிற்குள் புகுந்து யாரைக் காதலிக்கிறாய் என சிறுமியை இரண்டு இளைஞர்கள் தாக்கினர். இதனால் அவர்களிடமிருந்து தப்பிய சிறுமி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள போர்டேஜி காவல் நிலையப் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஐந்து பேர் கத்தி, கம்பு ஆகியவைகளுடன் 17 வயது சிறுமியின் வீட்டிற்கு நேற்று இரவு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமி மட்டும் தான் அந்த வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது இரண்டு இளைஞர்கள், யாரைக் காதலிக்கிறாய் ஏன அந்த சிறுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. இதனால் அவர்களுக்குள் அடித்துக் கொண்டனர். இதன் பின் அவர்கள் ஐந்து பேரும் சிறுமியைத் தாக்கத் தொடங்கினர். இதனால் அலறியடித்துக் கொண்டு உயிருக்குப் பயந்து போன சிறுமி வீட்டை விட்டு வெளியே தப்பி ஓடியதுடன் அங்கிருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த சத்தம் கேட்டு கிராமத்தினர் திரண்டதில் அந்த இரண்டு இளைஞர்களும் சிக்கினர். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். தகவல் அறிந்த போர்டேஜி காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து அந்த இளைஞர்களையும் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அந்த சிறுமி முன்பு காதலித்த இளைஞரை விட்டு விட்டு வேறு ஒரு இளைஞரை காதலித்துள்ளார். இதனால் அந்த இரண்டு இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுமியிடமே யாரைக் காதலிக்கிறாய் எனக்கேட்டு விடுவோம் என்று வீட்டிற்கு வந்த இடத்தில் தான் இந்த மோதல் ஏற்பட்டது என்று விசாரணையில் தெரிய வந்தது.

கிணற்றில் குதித்தால் பலமாக அடிபட்ட சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குதித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in