சரமாரி தாக்குதல்; செல்போன், பணம் பறிப்பு: சவாரிக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநரை பதறவைத்த கும்பல்

சேலையூர் காவல் நிலையம்
சேலையூர் காவல் நிலையம்சரமாரி தாக்குதல்; செல்போன், பணம் பறிப்பு: சவாரிக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநரை பதறவைத்த கும்பல்

ஆட்டோ ஓட்டுநரை சவாரிக்கு அழைத்து தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர், அகரம் பிரதான சாலையில், அடையாளம் தெரியாத நபர் நண்பர் ஒருவர் குடித்து விட்டு போதையில் உள்ளதாகவும், அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என கூறி ஆட்டோ கேட்டுள்ளார்.

இதனையடுத்து நண்பர் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு ஆட்டோ ஓட்டுநரை அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் நான்கு பேர் ஆட்டோ ஒட்டுநரை கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான ஆட்டோ ஓட்டுநர் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரிடம் இருந்த செல்போன், கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் மற்றும் 2,500 ரூபாய் பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்து தப்பி ஓடிவிட்டனர். 

இதனையடுத்து அந்த பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் ஆட்டோ ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவர் சென்னை மாத்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா என்பது தெரியவந்தது

மேலும், அயனாவரத்தில் இருந்து ஓலா ஆப் மூலம் சவாரி ஏற்றிக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், அப்போது வழிப்பறி நடந்ததாக போலீஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சேலையூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழிப்பறிகள் அதிகரித்துள்ளதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in