`ஏரியா விட்டு ஏரியா வந்து மது அருந்துவதா?'- விரட்டியடித்த இளைஞரை படுகொலை செய்த கும்பல்

`ஏரியா விட்டு ஏரியா வந்து மது அருந்துவதா?'- விரட்டியடித்த இளைஞரை படுகொலை செய்த கும்பல்

`ஏரியா விட்டு ஏரியா வந்து மது அருந்துவதா? என தட்டிக்கேட்ட வாலிபரை கும்பல் ஒன்று படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் ராஜேஷ் கண்ணா(28) டாடா வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜேஷ் கண்ணா வீட்டருகே உள்ள சமுதாய கூடத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ராஜேஷ் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர்கள் கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோருடன் அருகே சமுதாய கூடத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு பாதுகாப்பிற்காக சென்றனர். பின்னர் சிலை அருகே நண்பர்கள் அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் ராஜேஷ் கண்ணாவை கத்தியால் சரமாரி வெட்டி கொலை செய்தது.

இதனை தடுக்க முயன்ற அவரது நண்பர்கள் கார்த்திக், மோகன்ராஜ், இருவரையும் அந்த கும்பல் வெட்டி விட்டு அங்கிருந்து காரில் தப்பி சென்றது. தகவல் அறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து ராஜேஷ் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த இருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் நாகராஜ், அஜித், ரமேஷ் ஆகியோர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நேற்று முன்தினம் ராஜேஷ் வசிக்கும் பகுதியில் மது அருந்தியதும், அப்போது ராஜேஷ் அவர்களை ஏரியா விட்டு ஏரியா வந்து எதற்காக மது அருந்துகிறீர்கள் என கேட்டு அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ராஜேஷை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, நாகராஜ், அஜித், ரமேஷ், ஜீவா, லோகேஷ், பாரத்திபன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in