மயக்க ஊசி போட்டு இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்: அதிர்ச்சியில் கணவர் தற்கொலை

மயக்க ஊசி போட்டு இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்: அதிர்ச்சியில் கணவர் தற்கொலை

மகாராஷ்டிரா மாநிலத்தில் திருமணமான இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. இது தொடர்பான ஆடியோவை இளம்பெண்ணின் கணவருக்கு அனுப்பி வைத்தது. அதைக்கேட்ட கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் போகார்டன் தாலுகாவைச் சேர்ந்த திருமணமான இளம்பெண்ணை கஜானன் அசோக் தேஷ்முக், கஜானன் திலீப் ஷிராசாத் ஆகியோர் இரண்டு பெண்கள் உதவியோடு கடத்தியுள்ளனர். இதன் பின் அந்த இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அத்துடன் பாலியல் வன்கொடுமை செய்வதை செல்போனில் வீடியோ மற்றும் ஆடியோ எடுத்துள்ளனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் கணவருக்கு அந்த ஆடியோவை அந்தக் கும்பல் அனுப்பியுள்ளது. இதைக் கேட்ட அப்பெண்ணின் கணவர், விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில், கஜானன் அசோக் தேஷ்முக், ரவி தத்தாத்ரே சப்கல், கஜனன் திலீப் ஷிராசாத் மற்றும் இரண்டு பெண்கள் மீது தற்கொலைக்கு தூண்டுதல், பலாத்காரம் போன்ற பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்ராவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in