ரைட் லாரிகள் போகலாம்; ஏற்காட்டில் மரம் கடத்தியவர்களிடம் லஞ்சம்: வசமாக சிக்கிய வனக்காப்பாளர்

ரைட்  லாரிகள் போகலாம்;  ஏற்காட்டில் மரம் கடத்தியவர்களிடம் லஞ்சம்:  வசமாக சிக்கிய  வனக்காப்பாளர்

சேலம் மாவட்டத்தில் லாரியில் மரங்கள் கடத்தியவர்களிடம் லஞ்சம் வாங்கிய வனக்காப்பாளர் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மலைப்பிரதேசத்தில் சில்வர் ஓக் மரங்கள் அதிகம் உள்ளன. இந்த மரங்களை மரக்கடத்தல் கும்பல் வெட்டி லாரிகளில் கடத்தி வருகிறது. இப்பகுதியில் வனக்காப்பாளராக இருந்தவர் பிரபாகரன். இவர் லாரியில் மரம் கடத்தியவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து பிரபாகரனை பணியிட மாறுதல் செய்து சேலம் மாவட்ட வன அலுவலர் கௌதம் இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த மரக்கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பிருக்கிறதா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in