ரயில் பயணிகளிடம் ஒரு கோடி அபராதம் வசூலித்த முதல் பெண் டிக்கெட் பரிசோதகர்

டிக்கெட் பரிசோதகர் ரோசலின் ஆரோக்கிய மேரி
டிக்கெட் பரிசோதகர் ரோசலின் ஆரோக்கிய மேரிரயில் பயணிகளிடம் ஒரு கோடி அபராதம் வசூலித்த முதல் பெண் டிக்கெட் பரிசோதகர்

ரயிலில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து கடந்த 2022 - 2023 காலக்கட்டத்தில் ரூ.1.03 கோடி அபராதம் வசூலித்து சென்னை கோட்டத்தின் தலைமை டிக்கெட் பரிசோதகர் சாதனை படைத்துள்ளார்.

தலைமை டிக்கெட் பரிசோதகர் நந்தகுமார்
தலைமை டிக்கெட் பரிசோதகர் நந்தகுமார்

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது தொடர்ந்தது. இந்த முறையற்ற பயணத்தை தடுக்கும் வகையில், 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை 'ஒரு கோடி கிளப்' என்ற ஒரு புதிய நடைமுறையை தெற்கு ரயில்வே ஏற்படுத்தியது.

இதில், 2022-2023-ம் நிதியாண்டில் ரூ.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கும் டிக்கெட் பரிசோதகர்கள் இந்த கிளப்பில் சேர்க்கப்படுவார்கள். அந்தவகையில், ரூ.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கும் இலக்கை சென்னை கோட்டத்தை சேர்ந்த 3 டிக்கெட் பரிசோதகர்கள் எட்டியுள்ளனர்.

சென்னை கோட்டத்தின் தலைமை டிக்கெட் பரிசோதகர் எஸ்.நந்தகுமார் 27 ஆயிரத்து 787 வழக்குகள் பதிவு செய்து ரூ.1 கோடியே 55 லட்சம் அபராதம் வசூலித்துள்ளார்.

இதேபோல, சென்னை கோட்டத்தின் தலைமை டிக்கெட் பரிசோதகர் ரோசலின் ஆரோக்கிய மேரி ரூ.1 கோடியே 3 லட்சம் அபராதம் வசூலித்து சாதனை படைத்துள்ளார். இந்திய ரயில்வேயில் முதல் முறையாக அதிக அபராதம் வசூலித்த பெண் டிக்கெட் பரிசோதகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கூடைப்பந்து வீரரும்,முதுநிலை டிக்கெட் பரிசோதகருமான சக்திவேல் ரூ.1 கோடியே 10 லட்சம் அபராதம் வசூலித்து உள்ளதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in