தமிழ்நாட்டின் கிராம உதவியாளராக தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை!

தமிழ்நாட்டின் கிராம உதவியாளராக தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை!

தமிழ்நாட்டின் கிராம உதவியாளராக முதன்முறையாக ஒரு திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார். காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் திருநங்கைகள் பணியாற்றிவரும் நிலையில், கிராம உதவியாளராக ஒரு திருநங்கை தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டத்தில் உள்ள மேல்கரந்தை எனும் கிராமத்திற்கு, திருநங்கை சுருதி என்பவர் கிராம உதவியாளாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேற்று வழங்கினார்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 94 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதியான நபர்கள் கிராம உதவியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டத்தில் உள்ள மேல்கரந்தை எனும் கிராமத்திற்கு திருநங்கை சுருதி கிராம உதவியாளாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in