அமைச்சர் காரைத் தடுத்து நிறுத்திய பெண் போலீஸ்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

பிரியலெட்சுமி
பிரியலெட்சுமி அமைச்சர் காரைத் தடுத்து நிறுத்திய பெண் போலீஸ்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

கேரளத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சரின் வாகனத்தை தடுத்து நிறுத்திய பெண் காவலரின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளா மாநிலம், அடூரில் இருந்து பத்தனம்திட்டா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போத்திராட் பகுதி உள்ளது. இந்த சாலை வழியாக கேரள அமைச்சர் ரோஸி அகஸ்டின் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே நின்று இருகைகளையும் காட்டி சேலைகட்டி, சாதாரண உடையில் இருந்த பெண் ஒருவர் நிறுத்தினார். அமைச்சர் ரோஸி அகஸ்டின், தன் பாதுகாப்பு வாகனத்தையும் ஒதுக்கிவிட்டு நிறுத்தினார்.

உடனே அந்த பெண், யாரோ ஒரு அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிர்பறிபோகும் அபாயத்தில் கிடக்கிறார் என விபத்தில் படுகாயம் அடைந்து கிடந்தவரைக் காட்டினார். உடனே அமைச்சர் ரோஸி அகஸ்டின் தன் பாதுகாப்பு வாகனத்தில் அந்த காயம்பட்டவரை ஏற்றி அனுப்பிவைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்து கீழே கிடந்த பென்னி(52) என்னும் அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்வழியிலேயே உயிர் இழந்தார்.

அமைச்சர் காரையே தடுத்து நிறுத்திய பெண் பென்னியின் உறவினர் என்று அமைச்சரும், அவரது தரப்பினரும் நினைத்து இருந்தனர். ஆனால் காயம்பட்டவருக்கும், அந்தப் பெண்ணுக்கும் தொடர்பு இல்லை. அவர், அந்தப் பெண்ணின் பெயர் பிரியலெட்சுமி என்பதும், அவர் கேரள மாநிலம் கொடுமண் காவல்நிலையத்தில் காவலராக உள்ளார் என்பதும் தெரியவந்தது. இவரது கணவர் ரானி கேரள மின்வாரியத்தில் பணிசெய்கிறார். சீருடை இல்லாமல் வேறு ஒரு வேலையாக அந்த வழியாக தன் விடுப்புநாளில் சென்று கொண்டிருந்த காவலர் பிரியலெட்சுமி கண்முன்னே ஒரு உயிர் துடிப்பதைப்பார்த்து அமைச்சர் காரை நிறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள அமைச்சர் ரோஸி அகஸ்டின், ‘பல வாகனங்களை பிரியலெட்சுமி கைகாட்டியும் யாரும் நிற்கவில்லை. படுகாயம் அடைந்தவர் 7 நிமிடங்கள் வலியால் துடித்துள்ளார். கொஞ்சம் விரைந்து வாகனம் கிடைத்து இருந்தால் காப்பாற்றியிருக்கலாம். அந்த பெண் காவலருக்கு வாழ்த்துகள் ” என அவரது புகைப்படத்தையும் பகிர்ந்து வாழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in