முன்கூட்டியே நோட்டமிட்ட தந்தை... கொல்லப்பட்ட மகன்: தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு நடந்த கொடூரம்

கொலை
கொலை

தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு தன் மகனையே தந்தை துள்ளத், துடிக்க வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகில் உள்ள கவர்னகிரி பகுதியைச் சேர்ந்தவர் தமிழழகன். இவருக்கும், இவரது மகன் காசிராஜனுக்கும்(30) சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்துவந்தது. இதனால் இருவரும் தனித்தனியே வசித்து வந்தனர். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்துவந்தது.

இந்நிலையில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராக காசிராஜன் இன்று மதியம் வந்தார். இதைத் தெரிந்துகொண்டு காசி ராஜனின் தந்தை தமிழழகனும் அங்குவந்தார். நீதிமன்றம் முன்பே, தன் மகனை வழிமறித்து சொத்து சம்பந்தமாக அவரிடம் தமிழழகன் பேசினார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த தமிழழகன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தன் மகனை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து காசிராஜன் உயிர் இழந்தார். தமிழழகனை கைது செய்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. ஆள்நடமாட்டம் மிகுந்த நீதிமன்றம் முன்பு நடந்த இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in