`உங்கள் குழந்தைக்கு 'மெட்ராஸ் ஐ' இருந்தால் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்'- பெற்றோர்களுக்கு சென்ற மெசேஜ்

`உங்கள் குழந்தைக்கு 'மெட்ராஸ் ஐ' இருந்தால் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்'- பெற்றோர்களுக்கு சென்ற மெசேஜ்

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இப்போதும் மழை பெய்து வருகிறது. இந்த மழைக் காலத்திற்கு மத்தியில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் வலியும் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழகத்தில் தலைநகர் சென்னை முதல் கடைக்கோடி கன்னியாகுமரிவரை பரவலாக மழை வெளுத்து வாங்கியது. கனமழை ஓய்ந்துவிட்டாலும் இப்போதும் பல மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. வழக்கமாகவே மழைக்குப் பின்பு சீசன் நோயான, ‘மெட்ராஸ் ஐ’ வேகமெடுப்பது வழக்கம். அந்தவகையில் இப்போதும் தமிழகம் முழுவதும் `மெட்ராஸ் ஐ' பரவிவருகிறது.

அதிலும், குழந்தைகள் தான் இதில் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 'மெட்ராஸ் ஐ' பரவும் மையங்களாக பள்ளிக்கூடங்கள் மாறியுள்ளன. இந்நிலையில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்தும், மாணவர்களின் பெற்றோருக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “மெட்ராஸ் ஐ வேகமாகப் பரவி வருகிறது. உங்கள் குழந்தைகளுக்கு 'மெட்ராஸ் ஐ' இருந்தால் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'மெட்ராஸ் ஐ'யினால் பாதிக்கப்படுவோருக்கு கண்கள் சிவப்பாக இருத்தல், கண்ணைத் திறக்க முடியாத அளவுக்கு வலி ஆகியவை ஏற்படுகின்றன. சாதாரணமாக மருந்தகங்களில் கிடைக்கும், “சொட்டு மருந்துகளே” நல்ல பலனைக் கொடுக்கின்றன. இருந்தும் இது குழந்தைகளைப் பாதிக்கும் போது இருநாள்கள் அவர்களை முடக்கி விடுகின்றன. அதனாலேயே பள்ளிகளில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in