விளைச்சல் பாதிப்பால் விலை கிடைக்காத விரக்தி: 700 மூட்டை வெங்காயத்தையும் கண்மாயில் கொட்டிய விவசாயி

விளைச்சல் பாதிப்பால் விலை கிடைக்காத விரக்தி: 700 மூட்டை வெங்காயத்தையும் கண்மாயில் கொட்டிய விவசாயி

உரிய விலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் 700 மூட்டை வெங்காயத்தை விவசாயி கண்மாயில் கொட்டிய சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சானமாவு கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயியான இவர் ஏழு ஏக்கரில் சின்ன வெங்காயத்தை பயிரிட்டு விவசாயம் செய்திருந்தார். சின்ன வெங்காயம் 50 கிலோ கொண்ட மூட்டை 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை சந்தையில் விலை போகும் என்று சீனிவாசன் கணக்குப் போட்டிருந்தார்.

ஆனால், திடீரென தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் 50 கிலோ எடை கொண்ட சின்ன வெங்காயம் 750 ரூபாய்க்கு தான் வியாபாரிகள் விலைக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன், மற்ற வியாபாரிகளிடமும் வெங்காயத்தின் விலை குறித்து விசாரித்தார்.

ஆனால், விளைவித்த வெங்காயத்திற்கு உரிய விலை அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால் தான் விளைவித்த 700 மூட்டை சின்ன வெங்காயத்தையும் வாகனங்களில் ஏற்றி வந்த சீனிவாசன், கண்மாயில் கொட்டினார். இதனால் வேதனையடைந்த அப்பகுதி விவசாயிகள்," காய்கறிகளைச் சேமித்து வைக்க சேமிப்பு கிடங்குகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். அப்படி இருந்திருந்தால் இந்த வெங்காயத்தைப் பாதுகாத்திருக்கலாம்" என்று கூறினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in