கனமழையில் விழுந்த மரம்: அப்புறப்படுத்த முயன்ற விவசாயிக்கு நேர்ந்த சோகம்

விழுந்து கிடக்கும் மரம்
விழுந்து கிடக்கும் மரம்

கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதியில்  கனமழையால் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப் படுத்த முயன்ற விவசாயி ஒருவர், அந்த மரம் அவர்மேல் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் துரை (46).  கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த புங்கைமரம் ஒன்று வீட்டின் அருகே சாய்ந்து விழுந்தது.  இதனை வெட்டி அகற்றும் பணியில் நேற்று மாலை துரை ஈடுபட்டுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர் வெட்டிய மரக்கிளை ஒன்று துரையின் மீதே சரிந்து விழுந்தது. இதில் மரத்தின் கீழே சிக்கி மயக்கம் அடைந்த துரையை  உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு துரையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து துரையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய வைத்தீஸ்வரன் கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக அளவு பெய்த கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதியில் மரம் விழுந்து விவசாயி பலியாகி இருப்பது சோகத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in