சிகரெட் வாங்க சாலையைக் கடந்த மென்பொறியாளர்; மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு: நண்பர் கண்முன்னே நடந்த சோகம்!

மென்பொறியாளர் இளவரசன்
மென்பொறியாளர் இளவரசன்

சென்னையில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் சாலை தடுப்பு சுவரில் இருந்த மின்சார கம்பத்தில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை பள்ளிக்கரணை விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் இளவரசன் (33). இவரது சொந்த ஊர் ராமநாதபுரம். எம்சிஏ பட்டதாரியான இளவரசனுக்கு திருமணமாகி மாதரசி என்ற மனைவியும், கார்த்திகா என்ற மகளும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்த இளவரசன் நேற்று இரவு தனது நண்பருடன் மடிப்பாக்கம் பிரதான சாலை தந்தை பெரியார் நகரில் உள்ள கடை ஒன்றில் சிகரெட் வாங்க சென்றுள்ளார்.

அப்போது சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரை தாண்டி செல்ல முயன்றபோது அங்கிருந்த மின்சார கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கி இளவரசன் மயங்கி விழுந்தார். உடனே அவரது நண்பர், பொதுமக்கள் உதவியுடன் இளவரசனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு இளவரசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த மடிப்பாக்கம் போலீஸார் இளவரசன் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து மடிப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in