அறை விளக்கு அணைக்கப்படும்; திருடியவர்கள் தங்கச் செயினை போட்டுவிடவும்: இன்ஸ்பெக்டர் காட்டிய அதிரடி

அறை விளக்கு அணைக்கப்படும்; திருடியவர்கள் தங்கச் செயினை போட்டுவிடவும்: இன்ஸ்பெக்டர் காட்டிய அதிரடி

சென்னையில் ஆரம்ப சுகாதார மையத்தில் திருடுபோன தங்கச் செயினை இன்ஸ்பெக்டர் ஒருவர் வித்தியாசமான முறையில் மீட்டு கொடுத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உஷா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மதிய நேரத்தில் ஓய்வில் இருந்தபோது அவரது கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்கச் செயின் திருடப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டியன் விசாரணை நடத்தினார். அப்போது வெளி ஆட்கள் யாரும் தங்கச் செயினை திருடவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டியன் தங்கச் செயினை மீட்க வித்தியாசமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

தங்கச் செயினை பறிகொடுத்த ஊழியர் புஷ்பா
தங்கச் செயினை பறிகொடுத்த ஊழியர் புஷ்பா

அங்கிருந்த ஊழியர்களிடம் பேசிய இன்ஸ்பெக்டர், ஒரு அறையில் மின்விளக்கு அணைக்கப்பட்டு இருக்கும் என்றும் தங்கச் செயினை திருடியவர்கள் அந்தப் பையில் போட்டு விட்டு செல்லலாம் என்றும் உண்மையை மறைத்தால் அவர்கள் கண்டறியப்பட்டு வேலை இழக்கும் நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார். இதையடுத்து அறையின் விளக்கு அணைக்கப்பட்டு ஊழியர்கள் உள்ளே சென்று திரும்பிய பின்னர் மீண்டும் அறையில் உள்ள விளக்கு போடப்பட்டது. அப்போது பையில் தங்கச்செயின் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கச் செயினை உரியவரிடம் ஒப்படைத்து சென்ற இன்ஸ்பெக்டரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in