`எந்த கத்தியில் சாக விரும்புகிறாய்'- வாட்ஸ் அப்பில் படத்தை அனுப்பி கொலை செய்த கஞ்சா கும்பல்

`எந்த கத்தியில் சாக விரும்புகிறாய்'- வாட்ஸ் அப்பில் படத்தை அனுப்பி கொலை செய்த கஞ்சா கும்பல்

வாட்ஸ் அப்பில் கத்தி புகைப்படங்களை அனுப்பி எந்த கத்தியில் சாக நினைக்கிறாய் என கேட்டு இரண்டு பேரை வெட்டிவிட்டு தப்பி வந்தபோது கஞ்சா கும்பல், கஞ்சா தொழில் போட்டியில் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜா(49). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று பாரதி சாலை விக்டோரியா மருத்துவமனை அருகே நின்று கொண்டிருந்த போது, முகக்கவசம் அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று ராஜாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது. மனைவி கண்முன்னே நடந்த இந்த கொலை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இக் கொலை சம்பவம் தொடர்பாக ஜாம்பஜார் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறில் ராஜாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது. ஜாம்பஜாரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வினோத், பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால், அதே பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி சிட்டி சேகரின் மகன்கள் சூர்யா, தேவா ஆகியோர் சேர்ந்து ஜாம்பஜாரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு போட்டியாக ஆட்டோ ஓட்டுநர் ராஜா ஜாம்பஜார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சூர்யா, தேவா, வைத்தீஸ்வரன், விக்னேஷ் ஆகியோர் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து நேற்று அரும்பாக்கத்தில் கஞ்சா வாங்க வந்த இருவரை வெட்டி விட்டு பின்னர் ஆட்டோ ஓட்டுநர் ராஜாவை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சூர்யா, தேவா, விக்னேஷ், வைத்தீஸ்வரன் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (25), ஸ்ரீரஞ்சன்(19) ஆகியோர் சூர்யா கூட்டாளியான ஜாம்பஜாரை சேர்ந்த அமர் மற்றும் தனுஷ் ஆகியோரிடம் கஞ்சா கேட்டுள்ளனர். கஞ்சா கொடுக்க முடியாது என கூறிய அஜித்திடம் தனுஷ் தகாத வார்த்தையால் பேசி, அவரது வாட்ஸ் அப்பில் 5 கத்தி புகைப்படங்களை அனுப்பி எந்த கத்தியில் சாக விரும்புகிறாய் என தேர்வு செய்யுமாறு குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித் தகாத வார்த்தையால் பேசியதால் நேரில் வருமாறு அழைத்துள்ளனர்.

பின்னர் அஜித் தனது நண்பர்களான ஸ்ரீரஞ்சன், ஸ்ரீவாசன், லோகேஸ்வரன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் அரும்பாக்கம் திருவிக நகருக்கு சென்றுள்ளனர். அங்கு கத்தியுடன் தயார் நிலையில் இருந்த சூர்யா, தேவா, தனுஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் அஜித்திடம் பணம், செல்போனை பறித்து விட்டு ஓடஓட வெட்டினர். இதில் காயமடைந்த அஜித் மற்றும் ஸ்ரீரஞ்சன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அமைந்தகரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in