லாரியின் முன்பக்கம் கட்டப்பட்ட கைகள்... அதி வேகத்தில் சென்ற வாகனம்: வாலிபருக்கு மரண பயம் காட்டிய டிரைவர்

லாரியின் முன்பக்கம் கட்டப்பட்ட கைகள்... அதி வேகத்தில் சென்ற வாகனம்: வாலிபருக்கு மரண பயம் காட்டிய டிரைவர்

செல்போனை திருடியதாக கூறி வாலிபரின் இரண்டு கைகளையும் லாரியின் முன்பக்கத்தில் கட்டிவைத்த டிரைவர், சாலையில் மின்னல் வேகத்தில் சென்று மரண பயணத்தை காட்டியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தின் மார்ஷாகாய் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரா ஸ்வைன் என்பவர் பகுதிநேரமாக லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மற்ற லாரி ஓட்டுநர்களிடம் வேலை இருக்கிறதாக என்று கேட்டுள்ளார். அப்போது, லாரி ஓட்டுநர் ஒருவர் தன் செல்போனை காணவில்லை என்று கத்தியுள்ளார். இதனால், அங்கிருந்த மற்ற லாரி ஓட்டுநர்கள், கஜேந்திராவை பிடித்துள்ளனர். பின்னர், அவரது இரு கைகளையும் இழுத்து லாரியின் முன்பக்கமாகக் கட்டி வைத்து, அவரது கழுத்தில் செருப்புமாலை அணிவித்து உள்ளனர். அதன்பின் லாரியை வேகமாக இயக்கியுள்ளனர். திருடிய இளைஞரை அச்சுறுத்தும் வகையிலான இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

ஆனால், இது குறித்து பாதிக்கப்பட்ட புகார் அளிக்கவில்லை. அதே நேரத்தில், ஜகத்சிங்பூர் எஸ்பி அகிலேஷ்வர் சிங், இளைஞர் அதிகாரபூர்வமாக புகார் அளித்தவுடன் லாரி டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற ஒடிசா மனித உரிமைகள் ஆணையம், ஜகத்சிங்பூர் எஸ்பிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக உடனடியாக விசாரணையை தொடங்கி 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in