மனைவியுடன் கட்டிலில் தனிமையில் இருந்த டிரைவர்: ஆத்திரத்தில் கணவர் செய்த காரியம்

மனைவியுடன் கட்டிலில் தனிமையில் இருந்த டிரைவர்: ஆத்திரத்தில் கணவர் செய்த காரியம்

தனது மனைவியுடன் கட்டிலில் தனிமையில் இருந்த ஓட்டுநரை விறகுக்கட்டையால் வாலிபர் அடித்துக் கொலை செய்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வம். இவரது மனைவி ரூபா பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அதே பட்டாசு ஆலையில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் சாத்தூர் படந்தாலைச் சேர்ந்த கருப்பசாமியுடன் திருமணத்தை மீறிய உறவு ரூபாவிற்கு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு பாண்டிசெல்வம் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு வந்த கருப்பசாமி வந்துள்ளார். அத்துடன் ரூபாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த பாண்டிசெல்வம் அவரது மனைவி ரூபாவை, கருப்பசாமியுடன் கட்டிலில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பாண்டிசெல்வம், வீட்டில் இருந்த விறகுக்கட்டையால் கருப்பசாமியை சரமாரியாகத் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே கருப்பசாமி உயிரிழந்தார். இதனால் அங்கிருந்து பாண்டிசெல்வம் தப்பியோடி விட்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார், விரைந்து வந்து கருப்பசாமி உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பாண்டிசெல்வத்தை தேடி வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவால் நடந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in