லஞ்சம் வாங்கியதால் கைது; அதிமுக ஊராட்சி தலைவியின் பதவி பறிப்பு: காஞ்சிபுரம் கலெக்டர் அதிரடி!

பதவி பறிக்கப்பட்ட 'வேண்டா சுந்தரமூர்த்தி'
பதவி பறிக்கப்பட்ட 'வேண்டா சுந்தரமூர்த்தி'லஞ்சம் வாங்கியதால் கைது; அதிமுக ஊராட்சி தலைவியின் பதவி பறிப்பு: காஞ்சிபுரம் கலெக்டர் அதிரடி!

லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவியின் பதவியைப் பறித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஐயங்கார் குளம் பகுதியைச் சேர்ந்தவர் வேண்டா சுந்தரமூர்த்தி. இவர் அந்தப்பகுதியின் ஊராட்சி மன்றத் தலைவியாக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்கு வரைபடம் அனுமதி வழங்கக் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் 15 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸிடம் புகார் அளித்தார். இதனையடுத்து ரசாயனம் தடவிய பணத்தைக் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்து அனுப்பினர். அந்த லஞ்சப் பணத்தை வேண்டா சுந்தரமூர்த்தி வாங்கும் போது போலீஸார் அவரை கையுங்களவுமாக பிடித்தனர்.

இதனையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட வேண்டா சுந்தரமூர்த்தியின் பதவி மற்றும் அதிகாரத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி பறித்து உத்தரவிட்டுள்ளார்.

பதவி பறிப்பு காரணமாக ஊராட்சி மன்றத்தலைவி பதவி காலியாக உள்ளதாகவும், ஊராட்சி மன்றத்துணைத் தலைவர் பணியினை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in