குறைகளைக் கேட்டதுடன் சிறைக்கைதிகளுடன் அமர்ந்து உணவருந்திய டிஜிபி

குறைகளைக் கேட்டதுடன் சிறைக்கைதிகளுடன் அமர்ந்து உணவருந்திய டிஜிபி

சென்னை புழல் சிறையில் டிஜிபி அம்ரேஷ் புஜாரி ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் சிறைக்கைதிகளிடம் குறைகளைக் கேட்டதுடன் அவர்களுடன் தரையில் அமர்ந்து அவர் உணவருந்தினார்.

தமிழக சிறைத்துறை டிஜிபியாக இருந்தவர் சுனில்குமார்சிங். இவர் அண்மையில் ஓய்வு பெற்றதையடுத்து தமிழக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் புஜாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. புதிதாக பொறுப்பேற்ற டிஜிபி அம்ரேஷ் புஜாரி சென்னை புழல் சிறையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சிறையிலுள்ள மருத்துவமனை, தொழிற்சாலை, ஆகியவற்றைப் பார்வையிட்டு அவர் சிறைக்கைதிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் சிறைக்கைதிகளுடன் ஒன்றாக தரையில் அமர்ந்து டிஜிபி அம்ரேஷ் புஜாரி உணவருந்தினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in