இறந்தவர் இரவில் உயிருடன் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி; புதைக்கப்பட்டவர் யார்: நடந்தது என்ன?

இறந்தவர் இரவில் உயிருடன் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி; புதைக்கப்பட்டவர் யார்: நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டத்தில் விபத்தில் இறந்துவிட்டதாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்த ருசிகரச் சம்பவம் நடந்தது. இதனால் தான் யாரை அடக்கம் செய்தோம் என்னும் சந்தேகமும் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பெரியகோட்டை பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(72). கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர் கிடைக்கும் வேலைகளைச் செய்து வருகிறார். இப்படி இவர் வேலை விசயமாக அடிக்கடி வெளியூர் செல்வதும், சில நாள்கள் தங்கியிருந்து வீடு திரும்புவதும் வழக்கம். கடந்த சிலநாள்களாக வேலைக்குச் சென்ற பழனிச்சாமி வீடு திரும்பவும் இல்லை. அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை.

இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் இதுகுறித்து வடமதுரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்போது போலீஸார் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, ஒரு முதியவர் இறந்திருப்பதாகவும் அது பழனிச்சாமியா? என அடையாளம் காட்டுமாறும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, பழனிச்சாமி குடும்பத்தினர் அந்த சடலத்தைப் பார்த்தனர். அந்த சடலத்தின் முகம் சிதைந்து போயிருந்தது. ஆனால் தோற்றத்திற்கு பழனிச்சாமி போலவே இருந்ததால் அவர் பழனிச்சாமி என முடிவு செய்து அடக்கமும் செய்தனர்.

இந்நிலையில் உறவினர் சேர்ந்து இறந்துவிட்டதாக அடக்கம் செய்த பழனிச்சாமி, உயிருடன் திரும்பி வந்தார். நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருக்கும் போது வந்தார். அவரை பார்த்ததும் வீட்டில் உள்ள அதிர்ச்சியைடைந்தனர். பின்னர், பழனிச்சாமி வேலை விசயமாக வெளியூர் சென்றதால் தகவல் சொல்ல முடியவில்லை என்றார். இதனைத் தொடர்ந்து இன்று பழனிச்சாமி குடும்பத்தினர் வடமதுரை காவல் நிலையத்தில் இதுகுறித்து தெரிவித்தனர். போலீஸார், அப்படியானால் அடக்கம் செய்யப்பட்ட உடல் யாருடையது என விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in