பலூனுக்கு காற்றடித்தபோது வெடித்து சிதறிய சிலிண்டர்; பறிபோன உயிர்: 21 பேர் அனுமதி

பலூனுக்கு காற்றடித்தபோது வெடித்து சிதறிய சிலிண்டர்; பறிபோன உயிர்: 21 பேர் அனுமதி

பலூனுக்கு காற்றடித்துக் கொண்டிருந்தபோது ஹீலியம் வாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி, கோட்டைவாசல் பகுதியில் போத்தீஸ் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை முன்பு வியாபாரி அனாசி என்பவர் ஹீலியம் வாயு சிலிண்டர் மூலம் பலூன்களில் காற்றடித்து விற்பனை செய்து கொண்டிருந்தார். நேற்றிரவு இவரிடம் ஜீவானந்தம் (13) என்ற சிறுவன் பலூன் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, பலூனுக்கு காற்று அடித்தபோது திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அருகில் நின்று கொண்டிருந்த ரவிக்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சிறுவன் ஜீவானந்தம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிலிண்டர் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த நகைக்கடைகளின் கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய பலூன் வியாபாரி அனாசியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in