'என் நாடு தமிழ்நாடு, இந்திய தேசத்தின் வளநாடு': ஆளுநருக்கு நடிகர் ராஜ்கிரண் தந்த பதிலடி

ராஜ்கிரண்
ராஜ்கிரண்

ஆளுநருக்கும், தமிழக அரசிற்கும் இடையே முட்டல், மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் இப்போது தமிழ்நாட்டை, தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துசொல்ல அது தற்போது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக நடிகர் ராஜ்கிரண் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்திற்கு திராவிட சிந்தனையாளர்கள் மட்டுமல்லாது திரையுலகினர், சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் ஆதரவு, எதிர்கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தன் மனதில் தோன்றும் கருத்துகளை தன் முகநூல் பக்கம் வாயிலாக பளிச்சென சொல்லிவிடும் நடிகர் ராஜ்கிரண், இதுதொடர்பாகவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதில் நடிகர் ராஜ்கிரண், “வேறு ஏதேதோ பிரச்சினைகளை மடைமாற்றுவதற்காக எழுப்பப்படும்  சலம்பல்களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு, நம் கவனத்தை சிதற விட்டுவிடக் கூடாது. என் நாடு தமிழ்நாடு. இந்திய தேசத்தின் வளநாடு”எனப் பதிவிட்டுள்ளார். ஆளுநர் பேச்சினால் தமிழகம், தமிழ்நாடு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும்விதமாக நடிகர் ராஜ்கிரண் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in