வீடு தேடி வருகிறது காய்கறிகள்: நடமாடும் காய்கனி அங்காடி வாகனத்தை தொடங்கிவைத்தார் முதல்வர்

வீடு தேடி வருகிறது காய்கறிகள்: நடமாடும் காய்கனி அங்காடி வாகனத்தை தொடங்கிவைத்தார் முதல்வர்

கோயம்புத்தூர் உள்பட 5 மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக காய்கறி விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை கிலோ 100 ரூபாய் வரை உயர்ந்து விண்ணைத் தொட்டது. தற்போது வெங்காயம் கிலோ 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் கேரட், கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறி விலை அதிகரித்து வருகிறது. தற்போது தக்காளி கிலோ 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வட கிழக்கு பருவமழையால் தமிழகத்தில் மழை பெய்து வருவதால் காய்கறி விளைச்சல் குறைந்து காணப்படுகிறது. விலை உயர்ந்த போதுமெல்லாம் தமிழக அரசு அங்கன்வாடி மையங்களில் காய்கறிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் வீடுகளுக்கே சென்று பண்ணை காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில் 20 நடமாடம் காய்கறி அங்காடிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கோயம்புத்தூர், திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வோர் இல்லத்திற்கே சென்று பண்ணை காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில் காய்கறி அங்காடிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in