பிரியாவிடை கொடுத்த செஸ் ஒலிம்பியாட் நாயகன் 'தம்பி’!

பிரியாவிடை கொடுத்த செஸ் ஒலிம்பியாட் நாயகன் 'தம்பி’!

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் வீடியோவில் வந்து அனைவருக்கும் பிரியாவிடை கொடுத்தார் செஸ் ஒலிம்பியாட் நாயகன் ‘தம்பி’.

சென்னை மாமல்லபுரத்தில் ஆக. 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிபியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடர்பான வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க பணிகள் தொடங்கி செய்யப்பட்ட பல்வேறு ஏற்பாடுகள் தொடர்பான தகவல்கள் வீடியோ வடிவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. வீடியோ இறுதியில் செஸ் ஒலிம்பியாட் நாயகன் 'தம்பி' அனைவருக்கும் நன்றி தெரிவித்து பிரியாவிடை கொடுத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in