நள்ளிரவில் பெண்ணைக் காட்டி காரை நிறுத்தி கொள்ளை: போலீஸ் விசாரணையில் அதிர வைத்த சம்பவம்

நள்ளிரவில் பெண்ணைக் காட்டி காரை நிறுத்தி கொள்ளை: போலீஸ் விசாரணையில் அதிர வைத்த சம்பவம்

சென்னையில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை வைத்து காரை நிறுத்தி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விசாரணையில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணையும் அந்தக் கும்பல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்துள்ளது.

சென்னையில் போரூர் பைபாஸ் சாலையில் நேற்று நள்ளிரவு பாலியல் தொழில் செய்யும் பெண், தன்னை டூவீலரில் அழைத்து வந்த இளைஞருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், அந்த இளைஞரை அடித்து துரத்தியது. அத்துடன் அந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதன் பின் அந்த பெண்ணைக் கத்தியைக் காட்டி மிரட்டி பைபாஸில் வரும் காரை நிறுத்தச் சொல்லி மிரட்டியுள்ளது. பயந்து போய் அந்த பெண்ணும் அவ்வழியே வந்த காரில் லிப்ட் கேட்பது போல் கேட்டு காரில் ஏறியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த நான்கு பேரும், கார் ஓட்டுநரின் கழுத்தில் கத்தியை வைத்து அவர் வைத்திருந்த ஆயிரம் ரூபாயைப் பறித்துள்ளனர். அப்போது அவ்வழியே வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி சத்தம் போட்டவுடன் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இது தொடர்பாக தகவல் அறிந்த போரூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அந்த பெண்ணை அவர்கள் விசாரித்த போது, நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை ஆவடி கமிஷனர் அலுவலகம் அனுப்பி வைத்தனர். அதன் பின் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், இது தொடர்பாக எந்த புகாரும் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக போரூர் பைபாஸ் சாலையில் இரவில் வாகனங்களில் செல்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in