வீட்டிலிருந்து புறப்பட்ட கார் சாக்கடை கால்வாயில் பாய்ந்தது; உயிர் தப்பிய டிரைவர்: சென்னையில் விபரீதம்

வீட்டிலிருந்து புறப்பட்ட கார் சாக்கடை கால்வாயில் பாய்ந்தது
வீட்டிலிருந்து புறப்பட்ட கார் சாக்கடை கால்வாயில் பாய்ந்தது சென்னையில் கார் விபத்து

சென்னை மாதவரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அங்கிருந்த சாக்கடை கால்வாயில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.

ஜேசிபி மூலம் தூக்கப்படும் கார்

சென்னை அடுத்த மாதவரம் தணிகாசலம்நகரில் வசித்து வருபவர் மாரிமுத்து. தனது வீட்டில் இருந்து நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்தது. இதுகுறித்து அங்கிருந்த மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், ஜேசிபி எந்திரம் மூலம் காரை கட்டி வெளியே எடுத்தனர்.

ஜேசிபி மூலம் தூக்கப்படும் கார்
ஜேசிபி மூலம் தூக்கப்படும் கார்

காரை ஓட்டிச் சென்று மாரிமுத்து லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அண்மையில் பெய்த மழையால் பல கால்வாய்களின் தடுப்புசுவர் இடிந்து விழுந்து விட்டதாகவும் இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in