போதையில் இரண்டரை வயது குழந்தையை சுவற்றில் வீசிக்கொன்ற கொடூரத் தந்தை: மனைவியுடன் தலைமறைவு

போதையில் இரண்டரை வயது குழந்தையை சுவற்றில் வீசிக்கொன்ற கொடூரத் தந்தை: மனைவியுடன் தலைமறைவு

குடிபோதையில் தன் மகளைச் சுவற்றில் வீசி கொலை செய்த கொடூரத் தந்தை, மனைவியுடன் தலைமறைவாகிவிட்டார். அவரைப் போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் என்ற திலீப்குமார். இவரது மனைவி ஹேமலதா. இந்தத் தம்பதிக்கு இரண்டரை வயதில் ஹாசினி என்ற பெண்குழந்தை உள்ளது. சென்னையில் இருந்து இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசி, மாவட்டம் ஆலங்குளத்தில் வந்து குடியேறினர்.

இங்கு சக்திவேல் காய்கறிக்கடையிலும், அவரது மனைவி ஹேமலதா ஜவுளிக்கடையிலும் வேலைசெய்து வந்தார். இந்நிலையில் கடந்த 31-ம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்த ஹாசினி கீழே விழுந்துவிட்டதாக ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து குழந்தையின் உடல் நிலை மோசமாகவே திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று நள்ளிரவு குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தது. இந்நிலையில் குழந்தையோடு மருத்துவமனையில் தங்கியிருந்த ஹேமலதா, திலீப் குமார் ஆகியோர் தலைமறைவாகினர். இதனால் சந்தேகம் அடைந்த ஆலங்குளம் போலீஸார் அக்கம், பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், திலீப் குமார் குடிபோதையில் தன் மகளைச் சுவற்றில் தூக்கி எரிந்தது தெரியவந்தது. போலீஸாருக்குப் பயந்து தம்பதிகள் இருவரும் குழந்தை விளையாடும்போது கீழே விழுந்துவிட்டதாகக் கூறியதும் தெரியவந்தது. போலீஸாருக்குப் பயந்து தற்போது அவர்கள் தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது. போலீஸார் அவர்களைத் தேடிவருகின்றனர்.

குடிபோதையில் பெற்ற தந்தையே குழந்தையைச் சுவற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in