திருமணத்துக்கு தயாரானவர் விபத்தில் மூளைச்சாவு: 7 பேருக்கு மறுபிறவி கொடுத்த மணமகன்

திருமணத்துக்கு தயாரானவர் விபத்தில் மூளைச்சாவு: 7 பேருக்கு மறுபிறவி கொடுத்த மணமகன்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு வழங்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்போரூரை அடுத்த கண்ணகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ். இவருக்கு கடந்த 12-ம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில், இருசக்கர வாகன விபத்தில் ராஜ் சிக்கினார். தலையில் பலத்த காயமடைந்த ராஜ், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், ராஜ் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் இன்று தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உறவினர்கள் ராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்தனர். அதன்படி, அவரின் கண்கள், கிட்னி, கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 7 பேரின் உயிர் காக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தில் ராஜ் உயிரிழந்தாலும் 7 பேர் மூலம் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அவரது உறவினர்கள் கண்கலங்கியபடி கூறினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in