அதிர்ந்த டிஜே சத்தம்; மணமேடையிலேயே மாரடைப்பால் உயிரிழந்த மணமகன்: மணமகள் அதிர்ச்சி

மணமகளுடன் மேடையில்  சுரேந்திர குமார்
மணமகளுடன் மேடையில் சுரேந்திர குமார் அதிர்ந்த டிஜே சத்தம்; மணமேடையிலேயே மாரடைப்பால் உயிரிழந்த மணமகன்: மணமகள் அதிர்ச்சி

அதிகமான டிஜே சத்தத்தால் மணமகன் மேடையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் ஸ்ரீராம்மகரி மாவட்டம், இந்தவார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார். இவரது திருமண நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம் கொண்டாடத்துடன் நேற்றிரவு நடைபெற்று இருக்கிறது. அப்போது டிஜே இசை அதிக சத்தத்துடன் இசைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவேசம் அடைந்த மணமகன், டிஜே சத்தத்தை குறைக்கும்படி பலமுறை கூறியிருக்கிறார். ஆனால், அவரது சத்தத்தை யாரும் காது கொடுத்து கேட்கவே இல்லை. இந்த நிலையில் மணமகனும், மணமகளும் மாலை மாற்றிக் கொண்டனர்.

 சுரேந்திர குமார்
சுரேந்திர குமார்

அப்போது சிறிது நேரத்தில் மணமகன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் பதறிய உறவினர்கள் உடனடியாக மணமகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கெனவே சுரேந்திர குமார் இறந்துவிட்டதாக கூறி இருக்கின்றனர். இதனை கேட்டு இரு வீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர்.

டிஜே சத்தத்தால் மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in