திருமணமான ஒரு வாரத்தில் விபத்தில் புதுமாப்பிள்ளை பலி: தென்காசியில் நடந்த சோகம்

கலையரசன்
கலையரசன்

திருமணம் முடிந்த ஒரேவாரத்தில் புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், ஆனைகுளத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மகன் கலையரசன்(27) கடையநல்லூரில் உள்ள வங்கி ஒன்றில் வேலைசெய்து வந்தார். இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 7-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு எடுத்த விடுமுறை முடிந்து கலையரசன், மீண்டும் பணிக்குச் சென்றுவந்தார்.

இவர் பணிக்கு செல்வதற்காக சுரண்டை- சாம்பவர் வடகரை சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த சாம்பவர் வடகரையைச் சேர்ந்த மூர்த்தி(45) என்பவரது மோட்டார் சைக்கிள் வந்தது. இருவரும் நேருக்கு நேர் மோதினர்.

இதில் மூர்த்தி, கலையரசன் இருவருமே தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம்,பக்கத்தினர் இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று நண்பகல் புதுமாப்பிள்ளை கலையரசன் பரிதாபமாக உயிர் இழந்தார். திருமணம் முடிந்து ஒரேவாரத்தில் புதுமாப்பிள்ளை உயிர் இழந்த சம்பவம் சுரண்டை சுற்றுவட்டார மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in