பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுக்க வந்த காதலன்; காதலி வீட்டில் இருந்த ஆண் நண்பர்: அடுத்து நடந்தது என்ன?

பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுக்க வந்த காதலன்; காதலி வீட்டில் இருந்த ஆண் நண்பர்: அடுத்து நடந்தது என்ன?

காதலிக்கு நள்ளிரவில் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வந்த காதலன், அப்போது வீட்டில் வேறொரு ஆண் நண்பர் இருந்ததால் ஆத்திரமடைந்தார். இதனால் காதலியை மாடியில் இருந்து தள்ளி விட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.

சென்னை கேகே நகர் விஜயராகவபுரத்தைச் சேர்ந்தவர் ஆஷாராவ்(26). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் குரோம்பேட்டையைச் சேர்ந்த மரடோனா(31) என்பவரை காதலித்து வந்தார். இன்று ஆஷாராவிற்கு பிறந்த நாள் என்பதால், சர்ப்ரைஸ் கொடுப்பதாக நேற்று நள்ளிரவில் அவரது வீட்டிற்கு பரிசுப்பொருளுடன் மரடோனா வந்தார். அப்போது வீட்டில் வேறு ஒரு ஆண் நண்பர் இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மரடோனாவிடம், அவர் தனது நண்பர் என்று ஆஷாராவ் கூறியுள்ளார். ஆனால், அதை அவர் நம்பவில்லை. இதனால் மரடோனாவிற்கும், ஆஷாராவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த மரடோனா, 10 அடி பால்கனியில் இருந்து ஆஷாவை கீழே பிடித்து தள்ளி விட்டு விட்டு தப்பியோடி விட்டார். இதனால் படுகாயமடைந்த ஆஷாராவ், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஆஷாராவ் அளித்த புகாரின் பேரில் கே.கே. நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மரடோனாவைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in