திருட வந்த வீட்டில் மாணவியை நள்ளிரவில் பதறவைத்த சிறுவன்... ஒருவர் சிக்கினார், 2 பேருக்கு வலை

திருட வந்த வீட்டில் மாணவியை நள்ளிரவில் பதறவைத்த சிறுவன்... ஒருவர் சிக்கினார், 2 பேருக்கு வலை

நள்ளிரவில் திருட வந்த வீட்டில் நகை, பணம் கிடைக்காததால் தூங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், வண்ணாரப்பாளையத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை மூடாமல் குடும்பத்தினருடன் பின்பக்கத்தில் படுத்து தூங்கியுள்ளனர். மூத்த மகள் வீட்டிலும், கல்லூரி மாணவியான இளைய மகள் வராண்டாவிலும் தூங்கினார். இந்நிலையில் நள்ளிரவில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் வீட்டிற்குள் புகுந்துள்ளான். நகைகள், பணத்தை தேடியும் கிடைக்காததால் ஆத்திரத்தில் அந்த சிறுவன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளான். அப்போது, வீட்டின் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த 19 வயதுடைய கல்லூரி மாணவியின் வாயை பொத்தி, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளான்.

இதனால், மாணவி சத்தம் போடவே உடனே எழுந்த தந்தை, அந்த சிறுவனை பிடிக்க முயன்றுள்ளார். அவரால் பிடிக்க முடியவில்லை. அங்கிருந்து தப்பியுள்ளான் சிறுவன். அவனது கூட்டாளிகள் 2 பேரும் அங்கிருந்து எஸ்கேப் ஆகினர்.

இதுகுறித்து அரசு ஊழியர் கொடுத்த புகாரின் பேரில், தேவனாம்பட்டினம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் தேவனாம்பட்டினம் முனிஸ்வரன் கோயில் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த சிறுவனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, அரசு ஊழியர் வீட்டில் புகுந்து திருட முயற்சித்ததும், அவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தேவனாம்பட்டினம் சுனாமி நகரை சேர்ந்த 15 வயது சிறுவனை கைது செய்த காவல்துறையினர், சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். தலைமறைவாக உள்ள 2 சிறுவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in