பந்து என நினைத்து வெடிகுண்டை எடுத்து விளையாடிய சிறுவன்: உடல் சிதறி உயிரிழந்த கொடூரம்

பந்து என நினைத்து வெடிகுண்டை எடுத்து விளையாடிய சிறுவன்: உடல் சிதறி உயிரிழந்த கொடூரம்

பந்து என நினைத்து வெடிகுண்டை எடுத்து விளையாடிய 7 வயது சிறுவன் உடல் சிதறி உயிரிழந்த சோக சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா அருகே உள்ள பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே சிறுவர்கள் இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 7 வயது சிறுவன் ஒருவன் தண்டவாளம் அருகே கிடந்த பந்துபோல் கிடந்த வெடிகுண்டை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வெடிகுண்டு திடீரென வெடித்து சிதறியது. இதில் 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தான். அருகில் நின்ற மற்ற இரண்டு சிறுவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர். அப்போது தண்டவாளத்தில் மற்றொரு வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த வெடிகுண்டை கைப்பற்றிய வெடிகுண்டு நிபுணர்கள் அதை செயலிழக்க செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பந்து என நினைத்து வெடிகுண்டை வைத்து விளையாடிய சிறுவன் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் வரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in