அறிவுத் திருவிழாவிற்குப் போகலையா?: சென்னை புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு

புத்தகக் கண்காட்சி
புத்தகக் கண்காட்சி

புத்தகங்கள் அறிவின் குழந்தைகள் எனக் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் சென்னை மக்களாலும், இலக்கியவாதிகளாலும் கொண்டாடப்பட்ட சென்னை புத்தக் கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறுகிறது. அதிலும் இன்று விடுமுறை நாள் என்பதால் கூட்டம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசியின் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. கடந்த 6-ம் தேதி துவங்கிய இந்தக் கண்காட்சியில் ஆயிரம் அரங்குகள், லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. தினமும் பல்வேறு பதிப்பகங்களிலும் முன்னணி எழுத்தாளர்கள் அமர்ந்து கையெழுத்திட்ட பிரதிகளை வழங்குவதும், வாசகர்களைச் சந்திப்பதுமாக இலக்கிய மனம் கமழ்ந்தது.

மாலையில் கி.ராஜநாராயணன் அரங்கில் தினமும் இலக்கிய நிகழ்வுகளும் நடந்துவந்தது. இந்நிலையில் புத்தகக் கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இன்று மாலை நடக்கும் நிறைவு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இந்நிகழ்வில் பதிப்பகத் துறையில் தடம் பதித்தவர்கள், புத்தகக் காட்சி சிறப்புடன் நடக்க துணைபுரிந்தோரும் கவுரவிக்கப்படுகிறார்கள். புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுவதால் இன்று அதிகளவில் கூட்டம் இருக்கும் என்பதால் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in