`அம்மா... தாயே பிச்சைப்போடுங்க'- பரிதாபப்பட்ட பெண்ணை அதிர வைத்த கொள்ளையன்

கைது
கைது

நெல்லையில் வீட்டு வாசலில் பிச்சை கேட்டு நின்றவர் திடீர் என கத்தியைக் காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தப்பியோடிய அந்த கொடூர பிச்சைக்காரனை போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள பெருமாள் தெற்குவீதியைச் சேர்ந்தவர் அருண்ராஜ். எலக்ட்ரீசியனாக உள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி(28). இந்நிலையில் வாசலில் வந்த பிச்சைக்காரர் ஒருவர், “அம்மா... தாயே, பிச்சைப்போடுங்க!” எனக் கூக்குரல் எழுப்பினார். இதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் போய் சில்லரைக் காசை எடுக்கச் சென்றார் ராஜேஸ்வரி.

அப்போது பின்னாலே வீட்டுக்குள் நுழைந்த பிச்சை எடுக்க வந்தவர் கத்தியைக் காட்டி மிரட்டி ராஜேஸ்வரியை நகைகளை கழற்றச் சொன்னார். ராஜேஸ்வரி அலறி சத்தம் போடவே, பிச்சைக்காரன் வேடத்தில் வந்த திருடன் தப்பியோடினார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in