சீரியலில் இருந்து விலகினாலும் க்ளைமாக்ஸ் கொண்டாட்டத்தில் இணைந்த நடிகை!

சீரியலில் இருந்து விலகினாலும் க்ளைமாக்ஸ் கொண்டாட்டத்தில் இணைந்த நடிகை!

’நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடரில் இருந்து விலகினாலும், அதன் க்ளைமாக்ஸ் கொண்டாட்டத்தில் நடிகை ரச்சிதா பங்கேற்றுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் 2018-ம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வந்த தொடர் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’. இரண்டு வருடங்களாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த தொடரில் ‘சரவணன் மீனாட்சி’ புகழ் செந்தில் கதாநாயகனாகவும், ரச்சிதா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.

இந்த ஜோடி ஏற்கனவே, ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடரில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக அதில் இருந்து நடிகை ரச்சிதா திடீரென விலகினார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, ‘தொடரில் யார் இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை தயாரிப்பு தரப்பும், சீரியல் டீமும் முடிவு செய்யும் போது நமக்கு பிரச்சினை தான். இந்த அரசியல் காரணமாகவே தொடரில் இருந்து விலகினேன்’ என்றார்.
தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ’சொல்ல மறந்த கதை’ சீரியலில் நாயகியாக ரச்சிதா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. க்ளைமாக்ஸ் படப்பிடிப்பின் போது சீரியல் நிறைவைக் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த வீடியோவை ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த சீரியலை விட்டுப் பிரச்சினைகள் காரணமாக ரச்சிதா விலகினாலும், இறுதியில் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்க வேண்டும் என சீரியல் குழு சார்பாக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனால் ரச்சிதாவும் மறுப்பேதும் சொல்லாமல் அதில் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த காணொலியில், ‘சீரியல் முடிந்தாலும் இன்னும் பல நாட்களுக்கு இந்த தொடரும், கதாபாத்திரங்களும் நிச்சயம் மக்கள் மனதில் இருக்கும்’ என கூறி அனைவரும் மகிழ்ச்சியாக கேக் வெட்டி இருக்கிறார்கள். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ரச்சிதா, ‘இந்த காணொலியில் இருப்பது போல இந்த முடிவு அனைவருக்கும் மீண்டும் ஒரு நல்ல தொடக்கமாக அமையும். அனைவருக்கும் வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் ரச்சிதா நடித்த மஹா கதாபாத்திரத்தை என்றும் மறக்க மாட்டோம் என ரசிகர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in