44 உயிரைப் பழிவாங்கிய ஆன்லைன் சூதாட்டம்: ஆளுநருக்கு சாம்பலை அனுப்பி நூதனப்போராட்டம்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரின் போராட்டம்
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரின் போராட்டம்44 உயிரை பழிவாங்கிய ஆன்லைன் சூதாட்டம்: ஆளுநருக்கு சாம்பலை அனுப்பி நூதனப்போராட்டம்

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடைச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சாம்பல் அனுப்பும் போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு சட்டபேரவையில் தாக்கல் செய்த ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கு பல்வேறு அமைப்புகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை அண்ணாசாலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தமிழக ஆளுநருக்கு சாம்பல் அனுப்பும் போராட்டத்தை நடத்தினர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாவட்டத்தலைவர் ஆனூர் ஜெகதீசன் பேசுகையில், ‘’ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அனுப்பிய மசோதாவை அவ்வளவு எளிதாக ஆளுநர் புறந்தள்ளி விட முடியாது. ஆளுநரின் வேலை மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கூட்டியோ, குறைத்தோ சொல்ல வேண்டுமே தவிர பதவியில் இருந்துக் கொண்டு தொல்லைத் தரக் கூடாது. தமிழக அரசு மற்றும் பெரியார், அம்பேத்கர் போன்றவர்களை கொச்சைப் படுத்துவதையே தமிழக ஆளுநர் தொழிலாக வைத்துக் கொண்டுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் உயிரிழந்து வரும் நிலையில் தமிழக அரசு இயற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது தான் ஆளுநரின் வேலை. ஆனால், அதனைத் தவிர்த்து ஆளுநர் மாளிகையில் பஜனை நடத்திக் கொண்டிருக்கிறார் அதற்கு காரணம் பாஜக. இதனையெல்லாம் விடுத்து ஆன்லைன் சூதாட்டத்தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்’’ என்றார். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in