இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருள்: தஞ்சாவூர் கலைத் தட்டுக்கு முதலிடம்!

இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருள்: தஞ்சாவூர் கலைத் தட்டுக்கு முதலிடம்!

இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருளாகத் தஞ்சாவூர் கலைத் தட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தஞ்சாவூர் கைவினைக் கலைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் சிறந்த கைவினைப் பொருட்களைத் தேர்வு செய்ய முடிவெடுத்தனர். அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இணையதளம் மூலமாக பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் புவிசார் குறியீடு பெற்ற உற்பத்திப் பொருட்கள், உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், இயற்கைப் பொருட்கள் விவசாயப் பொருட்கள் என ஐந்து வகையான பொருட்கள் இடம்பெற்றது.

இந்த வாக்கெடுப்பில் கைவினைப் பொருட்கள் பிரிவில் தஞ்சாவூர் கலைத் தட்டு அதிக வாக்குகளுடன் முதலிடத்தைப் பெற்றது. அதற்கான சான்றிதழை மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னர் காலத்தில் வடிவமைத்த இந்த கலைத் தட்டு, தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. இந்த கலைத் தட்டிற்கு 2007ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது. தஞ்சாவூர் பகுதியில் மட்டும் 250 கைவினைக் கலைஞர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் 200 கைவினைக் கலைஞர்கள் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறந்த கைவினைப் பொருளாகத் தஞ்சாவூர் தட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது கைவினைக் கலைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in