தொழில்துறையைத் தங்கமாக மாற்றியவர் தங்கம் தென்னரசு: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

தொழில்துறையைத் தங்கமாக மாற்றியவர் தங்கம் தென்னரசு: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் மாநாட்டில் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் தொடர்ந்து மாநாடுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் துபாய், அபுதாபி சென்று 6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்தார்.
இந்நிலையில், சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இன்றைய மாநாட்டில், 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 74,898 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 22,252 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 17,654 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 21 நிறுவனங்களின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதுதவிர, பணிகள் நிறைவடைந்துள்ள 1,497 கோடி மதிப்பீட்டில் 7,050 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்ககூடிய 12 நிறுவனங்களின் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022 அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு முதலீட்டுக் களவிழா, தமிழ்நாடு டெக்ஸ்பீரியன்ஸ் இணையம், தமிழ்நாடு இன்ஃபோசிஸ் ஏற்றப்பலகை ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டன.

இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ”தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களில் 3-வது இடத்தில் தமிழ்நாடு என்பது வரலாற்று சாதனை. முதலிடத்திற்கு வருவற்கான திட்டமிடலை தொடங்கி விட்டோம். தமிழகத்தின் தொழில்துறையைத் தங்கமாக மாற்றியவர் தங்கம் தென்னரசு" என்றார்.
இம்மாநாட்டில், அமெரிக்க தூதரக அதிகாரி ஜூடித் ரேவ் பேசுகையில், "எளிதாக தொழில் தொங்க உகந்த் மாநிலங்களில் தமிழ்நாடு 14-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு வந்ததற்காக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு வாழ்த்துகள்" என்று கூறினார். தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்பட பலர் மாநாட்டில் பங்கேற்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in